யார் இந்த தமிழரசன்?
தமிழ் தேசிய தலைவன் தமிழரசன் குறித்தான செய்திகள் முழுக்க மறக்கடிக்கப்பட்ட இந்த தமிழ் தேசத்தில் நமக்கு கிடைக்க கூடிய சில செய்திகளை பகிர்வது அவசியம் எனக் கருதுகிறோம்..ஆகவே தோழர் பாலன்,தமிழரசன் கலை,மு.ரா.பேரறிவாளன், விடுதலைக் குரல்,யாழ் பக்கங்களில் இருந்தும் மற்றும் இணையச் செய்திகள்,கேட்டறிந்தவை என எல்லாவற்றையும் தொகுத்து கொண்டு வர முயல்கிறது கலகம்..இதோ
. தோழர் தமிழரசன் …
மக்கள் புரட்சியை விரும்பியவர்..மக்களோடு வாழ்ந்தவர்..முந்திரிக்காடுகளில் விளையும் அனைத்து முந்திரிகளையும் பெரும் முதலாளிகள் சுரண்டி கொழுத்த பொழுது அதற்கு எதிராக மக்களை திரட்டி கூட்டுறவு முந்திரி பண்ணை அமைக்க பாடுபட்டவர்..பல முறை அரசிடம் போராடியவர்..தமிழ் நாடு விடுதலையை இலக்காக கொண்டு போராடிய தலைவர் வங்கி கொள்ளை முயற்சியில் படுகொலை செய்யப்பட்டார்..பின்னர் தமிழரசன் தான் என மக்கள் கண்டு கொண்டதும் கண்ணீர் விட்டு அழுது அவருடைய இறுதி ஊர்வலத்தில் சுமார் 50 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்..ஒரு ஆயுத போராளி மக்கள் மத்தியில் மக்களுக்காக வாழ்ந்தது,மக்களுக்கான அரசியலை முன் மொழிந்தது,மக்களை திரட்டியது எல்லாம்..அவருடைய இறுதி ஊர்வலத்தின் மூலம் உலகறிந்தது..
மீன்சுருட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சகோதரி கலிங்கராணியை கற்பழித்துப் படுகொலை செய்த சாதிவெறி நிலப்பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த (லிங்கையாத் தேவரின் மகன்) இளவலை அம்பலப்படுத்தியும், தண்டிக்கக் கோரியும் போராட் டங்கள் நடத்தியதோடு மட்டுமல்ல. அதற்காகவே மீன்சுருட்டியில் சாதிஒழிப்பு மாநாட்டை நடத்தி, சாதிஒழிப்புக்கான கொள்கை அறிக்கையையும் வெளியிட்டவர் தோழர் தமிழரசன். தான் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய விடுதலைக்கு சாதிமுறை பெரும் தடையென்பதையும், அதை ஒழிக்க தனித் திட்டமும் வேண்டுமென்றும் உணர்வுபூர்வமாக பாடுபட்டார். அவர் உயிரோடு இருந்தவரை அப்பகுதியில் வன்னியர் சங்கத்தை காலூன்ற விடவில்லை.
. தோழர் தமிழரசன்
தமிழ்தேசியம் தழைத்தோங்கிய பகுதியைச் சேர்ந்தவன் என்ற முறையில் தமிழ் தேசியம் பற்றிய சில நிகழ்வுகளை இங்கு பதிவு செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த நிகழ்வுகள் கடந்த காலங்களில் ஊடகங்களில் சரியாக வெளிக்கொணரப்படவில்லை என்பது மட்டும் அல்லாமல் இதனை திரித்து பொய்க்கதை எழுதி மறக்கடித்தப் பெருமையும் வெகுஜன ஊடகங்களுக்கு உண்டு.1947 விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் ஆதிக்க சாதி பண்ணைக்காரர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலக்கட்டத்தில் இந்தியாவெங்கும் இடதுசாஇயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்த இயக்கங்களின் செயல்பாடு தீவிரமாகி 1960களின் பிற்பகுதியில் மேற்குவங்காளத்தில் மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் அமைப்பான மக்கள் யுத்தக் குழுதோன்றியது. இந்த அமைப்பு மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் பரவியது. குறிப்பாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் இந்த அமைப்பு வேகமாக வளர்ந்தது.கடலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், பென்னாடம், தருமபுரி போன்ற பின் தங்கிய கிராமங்களில் தான் இந்த இயக்கம் வளர துவங்கியது. இதற்கு இந்தப் பகுதியில் நிலவிய சமூக, பொருளாதார சூழலும் முக்கிய காரணம். வடமாவட்டங்களில் பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமி தான். இந்தப் பகுதியின் முக்கிய பொருளாதாரம் முந்திரி. முந்திரி வருடம் முழுக்க மகசூல் கொடுக்க கூடிய பயிர் அல்ல. வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே முந்திரி கிடைக்கும். பிறகு சீண்டுவார் இல்லை. இந்த முந்திரி காடுகளும் சிறு விவாசாயிகள் சொந்தமாக வைத்துக் கொள்ளக்கூடியவை அல்ல. பெரும் பண்ணைக்காரார்கள் வசம் தான் நிலங்கள் இருந்தன.இப்பகுதியின் பெரும்பான்மை மக்களான வன்னிய, தலித் மக்கள் இந்தப் பண்ணைக்காரர்களின் நிலங்களில் கூலி வேலை செய்பவர்களாக இருந்து வந்தனர். பிற மாநிலங்களில் பண்ணைக்காரர்கள் – அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடையேயான போராட்டம் வெடித்த பொழுது இப்பகுதியிலும் இந்தப் போராட்டம் வேரூன்ற தொடங்கியது. நக்சலைட் இயக்கங்களும் தமிழ் மண்ணில் அறிமுகமாகின.நக்சலைட் இயக்கமாக ஆரம்பித்த இந்தப் போராட்டம் பின் தமிழ் தேசியமாக, ஆயுதப் போராட்டம் மூலம் தமிழ் தேசியத்தை அடையும் இயக்கமாக உருவெடுத்தது. தமிழகத்தின் முதல் குண்டுவெடிப்பும் இப்பகுதியில் தான் நடந்தேறியது. அதனை அறிமுகப்படுத்தியர் பென்னாடத்தைச் சேர்ந்த புலவர் கலியபெருமாள். பள்ளி ஆசிரியராக இருந்த புலவர் கலியபெருமாள் “மக்கள் யுத்தக் குழு” இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். மேற்குவங்க நக்சலைட் தலைவர் சாரு மஜும்தாருடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.புலவர் கலியபெருமாள் மூலமாக நக்சலைட் இயக்கம் வடமாவட்டங்களில் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு புலவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்ட பொழுது அந்த குண்டுகள் வெடித்ததால், தீவிரவாத இயக்கம் பற்றிய செய்திகள் வெளிவரத்தொடங்கின.
தொடரும்....


No comments:
Post a Comment