Wednesday, 28 September 2016

#வீரப்பனாருடன்_சுபா_முத்துக்குமார் அவர்களின் களப்பணி

15-08-1995
வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்த 43 புலிகள் (3 பெண் புலிகள் உட்பட) தப்பித்தனர்
செய்தித்தாளில் செய்தியைப் படித்துக் கொண்டிருந்தார் மாறன்.
புலித் தளபதி மாறன்.
அவருடன் 4,5 புலிகள் வேலூர் காட்டுப்பகுதியில் ஒரு குகையில் பதுங்கியிருந்தனர்.
ஊருக்குள் போய்விட்டு ஒரு புலி வந்தார்.
"பழ.நெடுமாறன் ஐயாவுக்கு கடிதம் போட்டுவிட்டேன்.
தலைமைக்குத் தகவல் கொடுத்துவிட்டு நம்மை எப்படியும் அழைத்துச் சென்றுவிடுவார்"
"பணம் எப்படி கிடைத்தது?"
"ஊருக்குள் சென்று பேசியதுமே பேசும் தமிழ்நடையை வைத்து ஈழத்தான் என்று கண்டுபிடித்துவிட்டனர்.
உதவியும் செய்தனர்.
உணவும் தேநீரும் கூட கிடைத்தது"
"அடடா! தமிழ்நாட்டு மக்களின் பாசத்தை என்னவென்பது?
நீ புலி என்று கூறிவிடவில்லையே?"
"இல்லை. ஆனால் ஊர் மக்களுக்கு நாம் தப்பித்த செய்தி தெரிந்துள்ளது.
அவர்களுக்குப் புரிந்திருக்கும்"
"சரி, நாம் காட்டில் இருக்கும் வரை கவலையில்லை"
"கையிலே பணமில்லை, உதவி வரும் வரை என்ன செய்வது?"
"காட்டிலே ஏதாவது பழம், கிழங்கு கிடைக்கக்கூடும்"
உணவு தேடி காட்டுக்குள் சென்றனர்.
காக்கி உடை தரித்த ஒரு கூட்டம் வருவது தெரிந்தது.
ஓடிப் போய் குகையினுள் பதுங்கிக்கொண்டனர்.
"யாரது குகை உள்ளே? பயப்படாமல் வெளியே வாருங்கள்.
நான் வீரப்பன் வந்திருக்கிறேன்"
வீரப்பன் என்ற பெயரைக் கேட்டதுமே புலிகளின் மனதில் நிம்மதி பிறந்தது.
புலிகள் வெளியே வந்தார்கள்.
"யார் நீங்கள்?"
"நாங்கள் புலிகள்"
"அடடே! நம் புலித்தம்பிகளா?!
ஏது இந்த பக்கம்?
ஓ சிறையில் இருந்து தப்பியவர்களா?"
"ஐயா! அதற்குள் உங்களுக்கு எப்படி தெரியும்?!!"
"காட்டில் இருந்தாலும் நாட்டு நடப்புகளை உடனுக்குடன் எனக்குத் தெரிந்துவிடும்.
நேற்று இரவு இங்கே சந்தேகத்திற்குரிய சிலர் நடமாடியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
அதனால்தான் காண வந்தேன்.
நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்று யூகித்தேன்.
ஆமாம். அத்தனை வலிமையான கோட்டையில் இருந்து எப்படி தப்பித்தீர்கள்?"
"10 வாரங்களாகச் சுரங்கம் தோண்டி மதில் சுவர் ஏறிக்குதித்து தப்பித்தோம்"
"அடேயப்பா புலிகள் புலிகள்தான்.
சரி, இது என் கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லை.
காட்டிற்குள் வந்தால் என்னுடன் பாதுகாப்பாக இருக்கலாம்.
உங்களை நான் பத்திரமாக அனுப்பிவைக்கிறேன்."
"இல்லை. இங்கேயிருப்பதாகத் தகவல் கொடுத்துவிட்டோம்.
ஓரிரு நாட்களில் அழைத்துச் செல்ல வருவார்கள்."
"யார் வருவார்கள்?"
"அனேகமான 'தமிழ்நாடு மீட்சிப்படை' சுப.முத்துக்குமார்"
"ஓ. சரி கவனமாக இருங்கள்"
வீரப்பனாரின் தளபதி சேத்துக்குளி கோவிந்தன் ஒரு மஞ்சள் பையை கொடுக்க அதை மாறனிடம் கொடுத்தார்.
அது நிறையப் பணம் இருந்தது.
"தேவையானவற்றை வாங்கிக்கொள்ளுங்கள்.
பணம் தீர்ந்துவிட்டால் என் பெயரைச் சொல்லி பொருள் வாங்கிக் கொள்ளுங்கள்.
நான் இரண்டொரு நாட்களில் மீண்டும் வருகிறேன்.
அதற்குள் கிளம்பிவிட்டால் பிரபாகரனை நான் கேட்டதாகச் சொல்லுங்கள்."
"நன்றி ஐயா, உங்களைச் சந்தித்ததே பெரிய பாக்கியம்.
தலைவர் உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளார்.
நான்காண்டுகள் முன்பு காவிரிக் கலவரம் நடந்தபோது படையோடு போய் கன்னடவரைத் தட்டிக் கேட்டீர்களாமே.
அந்த செய்தி எத்தனை பெருமையாக இருந்தது தெரியுமா?!"
வீரப்பனார் சிரித்துக்கொண்டே
"ஏனப்பா இப்படியான வீரசாகசங்களை பிரபாகரன் மட்டும்தான் செய்யவேண்டுமா?!
உங்கள் அண்ணன் தம்பிகள் நாங்களும் சளைத்தவர்கள் அல்லர்.
வன்னிக்காடு அளவை ஒத்த காட்டுப்பகுதி என் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஆனால் பிரபாகரன் என்னைவிடப் பெரிய ஆளாக வருவான்.
காலம் வரும்போது கைகோர்ப்போம்.
சரி. கவனமாக இருங்கள்"
கூறிவிட்டு வீரப்பன் போய்விட்டார்.
இரண்டொரு நாட்கள் கழித்து காக்கி உடை தரித்த காவலர்கள் அங்கே வத்தனர்.
வீரப்பனார்தான் வருகிறார் என்று நினைத்து அசட்டையாக இருந்த புலிகள் பிடிபட்டனர்.
மீண்டும் சிறையிலடைக்கப்பட்டனர்.
இவர்களைத் தவிர சுவர் ஏறிக் குதிக்கும்போது இருவர் கால் முறிந்து பிடிபட்டனர்.
மற்ற அனைவரும் சுப.முத்துக்குமார் அவர்களால் பத்திரமாக ஈழத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Friday, 23 September 2016

மறைக்கப்படும் மறுக்கப்படும் தன் உயிரை இழந்த நிகழ்கால தமிழ் தேசிய லட்சிய போராளி சுபா முத்துக்குமார்...

சுபா முத்துக்குமார்...
மறைக்கப்படும் மறுக்கப்படும் தன் உயிரை இழந்த நிகழ்கால தமிழ் தேசிய லட்சிய போராளி சுபா முத்துக்குமார்...
தமிழ்த்தேசிய மீட்சிப்படையில் தன்னை இணைத்துக்கொண்டு ஆயுத வழியில் தமிழ்நாடு விடுதலை பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தவர்..
அந்த முடிவுக்கு வருவதற்கு ஆயுத வழியில் போராடி உயிர்நீத்த தமிழ்நாடு விடுதலை படையின் தோழர். தமிழரசனையே முன்னோடியாக கொண்டவர்..
1. ஆயுத பயிற்சிக்காக ஈழம் சென்றார். அங்கு தேசிய தலைவர் வழிகாட்டலின்படி சிங்கள படைக்கு எதிராக புலிகளின் பல்வேறு வெற்றிகரமான பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்றார்.
2. தேசிய தலைவரின் தனி பாதுகாப்பு அணிக்கு (சைபர் விங்) தேர்வு செய்யப்பட்டார்.
3. தமிழீழத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றியும் பயிற்சியும் பெற்று தமிழ்நாடு திரும்பினார்.
4. தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்த்தேசிய மீட்சிப்படை தலைமை ஏற்று வழி நடத்தினார். அத்துடன் புலிகளுக்கு தேவையான பொருட்களையும் இங்க்கிருந்து அனுப்பி வந்தார்..
5. சென்னை சிறையிலிருந்து தப்பித்த போராளிகள் ரோமியோ மற்றும் அவர்களது தோழர்களை பத்திரமாக தமிழ் ஈழம் அனுப்பி வைத்தார்.
6. வேலூர் கோட்டை சிறையிலிருந்து சுரங்கம் அமைத்து நாளு பெண் போராளிகள் உட்பட 43 விடுதலை புலி போராளிகளை பொறுப்பேற்று ஈழத்துக்கு அனுப்பி வைத்தார்
7. புதுக்கோட்டை மனமேல் குடியில் ஈழத்துக்கு பொருட்கள் அனுப்ப காத்திருந்த போது தமிழ் நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்டு. தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்படார்...
8. இரண்டாரை ஆண்டுக்கு பிறகு பினையில் விடுதலை ஆனார்.. விடுதலை ஆன வுடன் சந்தன காட்டில் வீரப்பனாருடன் சேர்ந்து போராட்டக் களம் அமைத்தார்.. வெள்ளி திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் தலைமையேற்று தாக்கதல் நடத்தி ஆயுதங்களை எடுத்துச் சென்றார்.. கண்ணட நடிகர் ராஜகுமாரை பினையாக கொண்டு வருவதற்கு களம் அமைத்து கொடுத்தார்...
9.ராஜகுமாரை விடுவிக்க தமிழரின் தாக பிரச்சனையான காவிரி நீர் பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு... அதிரடி படையால் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கு வாழ்வாதாற தீர்வு போன்ற கோரிக்கைகளோடு சுபா முத்துக்குமாரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வீரப்பனார் முன் வைத்தார்.
10. 2 ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பனாருக்கு பொருட்கள் கொண்டு சென்றதாக கொளத்தூர் மணி அவர்களுடன் கைது செய்யப்பட்டார். பிறகு கண்ணட சிறையில் அடைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்.. 1992 கர்னாடகத்தில் நடந்த காவிரி கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வெடிகுண்டு தயாரித்ததாக கைது செய்யப்பட்டு பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டார்.
11. நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு பினையில் வெளியில் வந்தார் மீண்டும் தமிழ் தேசிய மக்கள் அரசியலில் களம் புகுந்தார்.. மதுரையில் அறுத்தெரிவோம் முள்வேலி முகாமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். நாம் தமிழர் கட்சி மீண்டும் உருவாகி தமிழ்தேசியளர்களை ஒருங்க்கினைத்து வலுமை மிக்க இயக்கமாக மாற்றி இரண்டு ஆண்டு வலம் வந்தார்..
தமிழகம் முழுவதும் வலிமைப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் தமிழின துரோகிகளால் 15.02.2011 அன்று இரவு 9 மணி அளவில் புதுக்கோட்டை நகரத்தில் படுகொலை செய்யப்பட்டார்...!

கன்னட வெறியர்களுக்கு எதிராக வெடிகுண்டுகளை பதுக்கி வைத்த எங்கள் தோழன் முத்துக்குமார்.

கன்னட வெறியர்களுக்கு எதிராக வெடிகுண்டுகளை பதுக்கி வைத்த எங்கள் தோழன் முத்துக்குமார்.
கடந்த 1991 ல் காவிரி நதி நீர் தொடர்பாக கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் ஏற்பட்டு 200 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். பல ஆயிரக்ககணக்கான சொத்துக்கள் கொல்லையடிக்கப்பட்டன. பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து தமிழகத்திற்கு அகதியாக வந்தனர்.
அந்த நிலை தமிழர்களுக்கு மீண்டும் ஏற்பட்டால் கன்னட்ர்களை தாக்க முத்துக்குமார் தலைமையில் ஒரு செயல் திட்டம் தீட்டப்பட்டு வெடிகுண்டுகள் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தப்பட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டது.
வீரப்பனுடன் சேர்ந்து இராஜ்குமார் கடத்தலுக்கு மிக முக்கிய சக்தியாக விளங்கியவர் முத்துக்குமார்.
தமிழர்கள் மீது தாக்குதல் அப்போது நடைபெற வில்லை. இந்நிலையில் கடந்த 2002 ல் அந்த வெடிபொருள்களை கர்நாடக காவல்துறையினர் கைப்பற்றி முத்துக்குமார், ஐயா குணா, பேராசிரியர் நெடுஞ்செழியன் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. 3 ஆண்டுகள் சிறையில் இருந்த முத்துக்குமார் உள்ளிட்ட அனைவரும் அந்த வழக்கில் இருந்து விடுதலை ஆனார்கள்.
கடந்த 15.02.2011 ல் முத்துக்குமார் புதுக்கோட்டையில் வைத்து அரசின் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார்.
தமிழனை அடித்தவனை அடக்க எங்கள் தோழன் முத்துக்குமார் இன்று இல்லை.
நமது இனத்தை காக்க
நீங்கள் முத்துக்குமாராக மாறுவீர்களா?